14வயது சிறுமிக்கு கருக்கலைப்பு! உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதி மன்றத்தில் குழந்தைகள் நல குழு சார்பில் தொடரப்ட்ட வழக்கு நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மகப்பேறு துறை தலைவர் டாக்டர் வசந்தா நீதிமன்றத்தில் ஆஜராகி 14 வயதுள்ள சிறுமியின் கருவை விரைவில் கலைக்க அனுமதி கேட்டார்.பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரின் தாயாரும் கருக்கலைப்புக்கு சம்மதித்தனர். இதையடுத்து நீதிபதி சிறுமியின் வயிற்றில் வளரும் 18 வார கருவை கலைக்க உத்தரவிட்டார்.கருவுற்ற 14 வயது சிறுமி தற்போது காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நல குழுவின் பாதுகாப்பில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here