அன்புமகள் மகிழ்ச்சிக்கு மொட்டையடித்த தந்தை!

கலிபோர்னியா: அன்பு மகளின் புன்னகைக்காக மொட்டையடித்துக்கொண்டார் தந்தை. மனதை நெகிழவைக்கும் இச்சம்பவம் கலிபோர்னியாவில் நடந்துள்ளது.கலிபோர்னியா மாகாணம் சிட்ரஸ்ஹைட்ஸ் பகுதியை சேர்ந்தவர் சாஜ். இவர் மனைவி ஆஸ்லே. இத்தம்பதிக்கு மலியாஹெய்ஸ்(5) என்ற மகள் இருக்கிறார்.மலியாவுக்கு வழுக்கைத்தலை நோயால் பாதிக்கப்பட்டார். குழந்தைகளுக்கு ஏற்படும் அரியவகையான இந்நோயால் தலைமுடி வளராது என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதனால் வெளியிடங்களுக்கு செல்லும்போது அனைவரும் மலியாவை கேலி செய்கின்றனர்.இரு தினங்களுக்கு முன்னர் மலியா குடும்பத்தினருடன் ஷாப்பிங் சென்றார். மாலில் சில சிறுவர்கள் அவளது வழுக்கை தலையை கேலி செய்தனர். இதனால் மலியா அழுதார்.வீடு திரும்பியதும் மகளின் மகிழ்ச்சிக்காக தந்தை அவளிடம் எல்கட்ரானிக் ரேசரை கொடுத்து தனது தலைமுடியையும் நீக்கச்சொன்னார்.
அந்த விடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here