நீண்டநேரம் காரில் செல்வது ஆபத்து! டாக்டர்கள் எச்சரிக்கை!!

டோக்கியோ:காரில் நீண்டநேரம் அமர்ந்து செல்வதால் ரத்தம் உறைதல் நோய் பாதிக்க வாய்ப்புள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற மருத்துவ ஆய்வில் இதுகுறித்து தெரியவந்துள்ளது.

2016ல் ஜப்பானின் குமமட்டோ பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் நீண்டதூரம் காரில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
அவர்களில் பலர் விடிஈ எனப்படும் வெனஸ் த்ராம்போ எம்பாலிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்தது.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தம் உறையும். கால்தசை, நுரையீரல், இருதயம் ஆகிய உறுப்புகளில் ரத்தக்குழாய் நசுங்கி ரத்தம் உறையும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
கார், விமான பயணங்களில் ஒரே இருக்கையில் நீண்டநேரம் பயணிப்பதால் இந்நோய் உருவாகிறது என தெரியவந்துள்ளது.எனவே, பிரயாணத்தின்போது ஒரே போஸில் நீண்டநேரம் அமர்ந்து செல்லவேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here