குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து இளம்பெண் பாலியல் வன்முறை!

சேலம்: கணவரைப் பிரிந்த 25 வயது இளம்பெண் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான தனது தாத்தாவிற்கு சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து தனது தாயுடன் மருத்துவ மனையில் தங்கியுள்ளார்.சேலம் அழகாபுரம் காட்டூரை சேர்ந்த நயீம் என்ற வாலிபர் அப்பெண்ணுடன் நட்பாக பழகி அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் குரும்பம்பட்டி உயிரியல் பூங்கா சென்றுள்ளனர். பின்பு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். நயீம் தனது நண்பர்களான ரஞ்சித் நபீஸ் இருவரையும் விடுதிக்கு அழைத்துள்ளார்.
மூன்று பேரும் சேர்ந்த குளிர்பானத்தில் மதுவை கலந்து அந்த பெண்ணிற்கு கொடுத்துள்ளனர். மயங்கிய நிலையில் இருந்தவரை அவர்கள் பாலியல் வன்முறை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரையடுத்து போலீசார் நயீம் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here