புல்லட் ரயிலை நடுவழியில் நிறுத்திய பிளாஸ்டிக் பை!

சீனா: புல்லட் ரயிலை ப்ளாஸ்டிக் பை நிறுத்திய ஆச்சர்ய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவில் முக்கிய நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் இயக்கப்படுகிறது.சின்சியாங் நகரில் இருந்து செங்சூ நகருக்கு இடையே புல்லட் ரயில் விடப்பட்டுள்ளது.
இரு நகரங்களுக்கு இடையே உள்ள 1235 கி.மீ. தூரத்தை இந்த ரயில் 6மணி நேரத்துக்குள் கடக்கிறது.

சம்பவத்தன்று ரயில் பாதையில் பறந்துவந்தது ஒரு பிளாஸ்டிக் பை. இதனை ஸ்கேனர்கள் மூலம் ரயில் ஓட்டுநர் பார்த்தார்.
முன் ஜாக்கிரதையாக ரயிலை நிறுத்தினார்.
20நிமிடம் நின்றது ரயில். பாதையில் இருந்து பிளாஸ்டிக் பை அகற்றப்பட்ட பின் பயணத்தை தொடர்ந்தது. புல்லட் ரயில் 20நிமிடம் நின்றதால், சின்சியாங் மாகாணத்தில் அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. ஒரு மணி நேரம் முதல் 3மணி நேரம் வரை தாமதமாக மற்றரயில்கள் புறப்பட்டன.
பிளாஸ்டிக் பை என்றாலும் ரயில் செல்லும் வாகத்தில் அதில் மோதினால் விபத்து ஏற்படவாய்ப்புள்ளதால் புல்லட் ரயில் நின்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here