Connect with us

india

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 10 பேர் பலி!

Published

on

ஐதராபாத்: தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.இந்நிலையில ஆந்திரா தெலுங்கானா ஆகிய இடங்களில் நேற்று மாலையிலிருந்து பலத்த காற்று மற்றும் இடி மின்னல்களுடன் பலத்த மழை பெய்துள்ளது.
இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதில் மின்சார கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
தக்காளி வாழை ஆகியவை சேதமடைந்தன. இந்த மழையால் ஆந்திராவில் 8 பேரும் தெலுங்கானாவில் 2 பேரும் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் சில இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகியுள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator