விமான உற்பத்தியில் நடிகர் அஜித்!

சென்னை: சென்னை எம்.ஐ.டி.யில் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லேண்டில் வரும் செப்டம்பர் மாதம் ஆளில்லா விமானம் இயக்கம் தொடர்பான போட்டிகள் நடைபெறுகிறது.

இதற்காக நடைபெற்ற தகுதி போட்டியில் இந்தியா உள்ளிட்ட 55 நாடுகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றன.

இப்போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் குழு கலந்து கொள்கிறது. இக்குகுழுவிற்கு உதவி செய்ய நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போட்டியில் பங்கேற்கவுள்ள குழுவினர் 30கி.மீ. தொலைவில் உள்ளவரிடம் ரத்தமாதிரியை சேமித்து திரும்பும் வகையில் விமானத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.இதற்கான ஆலோசனைகளை அஜித் வழங்குவார். அதற்காக கவுரவ ஊதியமும் நடிகருக்கு வழங்கப்படும்.
இந்த ஊதியத்தொகையை எம்.ஐ.டி.மாணவர்கள் கல்வி வளர்ச்சிநிதிக்கு நன்கொடையாக அஜித் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here