ஓடிப்போ யோகி! காங்கிரஸ் அதிரடி பிரச்சாரம்!!

பெங்களூர்:கர்நாடகாவில் பேரவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
நட்சத்திர பேச்சாளராக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் களம் இறக்கப்பட்டுள்ளார்.அவர் 11பொதுக்கூட்டங்களில் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை பேசுகிறார்.
இன்று பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராமராஜ்யம் அமைக்க அனுமனை கர்நாடகாவில் இருந்து எதிர்பார்க்கிறோம் என்றார்.காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் மெஷினாக கர்நாடக மாநிலத்தை சித்தராமையா வைத்துள்ளார்.
கர்நாடக அரசு பிரிவினை மனப்பான்மையுடனும், ஜிகாதி கொள்கையுடனும் உள்ளது.
இதனால் 23 பாஜக தொண்டர்கள் பலியாகி உள்ளனர். சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்றார்.இதற்கு பதிலடியாக ‘ஓடிப்போ யோகி’ பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ்.
உத்தரப்பிரதேசத்தில் புழுதிப்புயலால் 45பேர் இறந்துள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.தனது மாநில மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு உதவி, ஆறுதல் கூறாமல் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார் யோகி ஆதித்யநாத்.
அவர் உடனடியாக மாநிலத்துக்கு திரும்பவேண்டும். அங்கு மக்களுக்கு ஆறுதல்கூறவேண்டும் என்று காங்கிரஸ் ஓடிப்போ யோகி என்ற பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here