சிரசாசனம் உடலுக்கு வலிமை தரும்! நடிகை அமலாபால் டிப்ஸ்!!

சென்னை: நடிகை அமலாபால் சமீபத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். அமலாபால் யோகாசன பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்காக யோகா பயிற்சியாளரை வைத்து யோகாசனம் கற்றுக்கொள்கிறார்.பார்க் ஒன்றில் மரத்தின் கீழே தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் படம் இணையத்தில் வெளியாகியது. யோகாவில் தலைகீழாக நிற்கும் சிரசாசனம் செய்வது மிகவும் கஷ்டம்.
தலைகீழாக நிற்பது உடலுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் அதன் பயன்குறித்தும் தற்போது உணர்ந்து இருக்கிறேன். எல்லோராலும் சிரசானத்தை எளிதாக செய்ய முடியாது. கடும் பயிற்சிகள் மூலம் மட்டுமே செய்ய முடியும்.
ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தலைகீழாக நின்று பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த ஆசனம் உடம்பை  வலுவாக்கும். எல்லோரும் அவசியம் இந்த ஆசனத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என அமலாபால் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here