அமீரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் கட்டணம் தள்ளுபடி!!

அமீரகம்: அமீரகத்தில் ஆப் வழியாக இலவச தொலைபேசி, விடியோ சாட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக எடிசாலட், டூ ஆகிய நிறுவனங்கள் இதற்காக போட்டிம், சீ மீ என்ற ஆப்களை வெளியிட்டுள்ளன.

இந்த ஆப்களை பயன்படுத்த மாதந்தோறும் 50திராம் கட்டணம் செலுத்தவேண்டும்.
24மணி நேரமும் ஆப் உதவியுடன் தொடர்புகொள்ள முடியும்.
இந்நிலையில், அமீரகத்தில் தற்போது காது கேளாத அரபுக்கள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தொலை தொடர்பு மாதாந்திர கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுப்படி இவ்வாறு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here