கர்நாடகாவின் ’ரூபாய் முதல்வர்’! பிரதமர் மோடி கிண்டல்!!

பெங்களூர்: காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, சித்த- ‘ரூபையா’வாக ஊழல் அரசு நடத்திவருகிறார் என்று பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டினார்.
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் பிரதமர். கல்புர்கி பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:வளர்ச்சியில் கர்நாடகா பின் தங்கியுள்ளது. ஊழலில் முன்னேறியுள்ளது சித்தராமையா அரசு. முதல்வர் சித்த ரூபைய்யாவாக ஆட்சி நடத்திவருகிறார்.
கடந்த தேர்தலில் ஜெயித்தால் மல்லிகார்ஜூனா கார்கே முதல்வராக்குவோம் என்று காங்கிரஸ் கூறியது.தேர்தல் முடிந்ததும் ரகசிய பேரங்கள் சித்தராமையா முதல்வர் ஆனார். கர்நாடகாவில் தலித்துகள், பழங்குடியினர் நலன் புறக்கணிக்கப்படுகிறது. பீதரில் ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவத்துக்கு வருத்தம் கூட தெரிவிக்காத காங்கிரசார், டெல்லியில் மெழுகுவர்த்தி பேரணி நடத்துகின்றனர்.
கார்கேவின் சொத்து மதிப்பு அதிகரித்தால் போதுமா? தலித் சமூகம் அதனால் முன்னேறிவிடுமா?கர்நாடகாவில் பாஜக ஜெயித்தால் விவசாயிகள், இளைஞர்கள் பயனடைவார்கள். மாநிலம் வளர்ச்சியடையும். காங்கிரஸ் ஜெயித்தால் ஒருசில குடும்பத்தினர் மட்டுமே ஜொலிப்பார்கள்.பெல்லாரி வளர்ச்சிக்கு ரூ.3ஆயிரம் கோடி ஒதுக்குவேன் என்று சோனியா கூறினார். வாக்குறுதியை மறந்துவிட்டார். பெங்களூர் தோட்ட நகரம், ஐடி தலைநகரம் என்ற பெயர்கள் அழிந்து கிரைம் நகரம் என்று பெயர் பெற்றுள்ளது.  ஸ்டீல் பாலம் கட்டினால் பணமோசடி பாலமாகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி தனது பிரச்சாரத்தின் போது பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here