கத்தார் ஏர்வேஸ் இந்தியாவில் சேவை துவக்குகிறது!

மும்பை: கத்தார் அரசின் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் விரைவில் இந்தியாவில் சேவை துவக்க உள்ளது.இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்களை 3நிறுவனங்கள் இயக்குகின்றன. ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், விஸ்தாரா.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் விஸ்தாராவுக்கு விற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், கத்தார் ஏர்வேஸ் இந்தியாவில் விமான சேவை துவக்க ஆர்வம் கொண்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய விமானபோக்குவரத்து துறை அதிகாரிகளுடன், கத்தார் ஏர்வேஸ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
20விமானங்கள் வைத்திருந்தால் ஒரு நிறுவனம் வெளிநாட்டு விமான சேவை இந்தியாவில் இருந்து நடத்த முடியும்.

ஆனால், 20க்கும் அதிக விமானங்களைக்கொண்டுள்ள கத்தார் ஏர்வேஸ், இந்தியாவில் இருந்தே விமானங்களை வெளிநாடுகளுக்கு இயக்க உள்ளது.
2016ல் விமான போக்குவரத்து துறையில் 100சதவீதம் அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இதனால் இந்தியாவில் விமான போக்குவரத்து சந்தை விரிவடைந்துள்ளதாக கத்தார் ஏர்வேஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here