காவல் நிலையத்தில் அரசு ஊழியர் அடித்து கொலை!

சென்னை: மதுராந்தகம் முத்தாலம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் சிற்றரசு. தொடக்க கல்வி அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வெண்ணிலா.சிற்றரசுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் இடத்தகராறு இருந்து வந்தது.இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். ஆனந்த் சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிற்றரசுவை மாலை 4 மணிக்கு விசாரிக்க கூட்டிச்சென்றனர். இரு குடும்பத்தினரும் வழக்கு
போட வேண்டாம் நாங்கள் சமாதானம் செய்து கொள்கிறோம் என தொரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வெளியில் சென்றதாக கூறி மறுநாள் காலை வரும்படி அனைவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.நேற்றுக்காலை சிற்றரசுவின் உறவினர்கள் காவல் நிலையம் சென்ற போது சிற்றரசு அதிகாலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.மனைவி வெண்ணிலா கூறும்போது போலீசார் விசாரணை என்ற பெயரில் எங்கள் கண் முன்னே அவரை அடித்து உதைத்தனர். இரவு எனது கணவரை போலீசார் சித்தரவதை உள்ளனர் என கூறினார். காவல் நிலையத்தில் சிற்றரசு அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி., சந்தோஷ் ஹதிமானி
டி.ஐ.ஜி. தேன்மொழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதோடு விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்றனர். சிற்றரசுவின் மனைவி செங்கல்பட்டு மாஜிஸ்திரேட்டிடம் புகார் மனு அளித்துத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here