கால்பந்து வீரருக்கு சவுதி அரசு கவுரவம்! புனித மெக்கா நகரில் நிலம் அன்பளிப்பு!

சவுதிஅரேபியா: கால்பந்து விளையாட்டு வீரர் முகமது சலாஹூவை கவுரவிக்கும் வகையில் புனித மெக்கா நகரில் அவருக்கு நிலம் தரப்படும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் அணியில் விளையாடிவருபவர் முகமது சலாஹூ(25). எகிப்தை சேர்ந்தவர்.
தனது அர்ப்பணிப்பு, அதிரடி ஆட்டத்தால் உலகம் முழுவதும் ரசிகர்களை திரட்டியவர். ஒரே ஆண்டில் 41கோல் போட்டு அசத்தியவர்.இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் என்று இங்கிலாந்தில் தேர்வாகி உள்ளார்.
அவரது விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் வகையில் புனித மெக்கா நகரில் இடம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சவுதி அரசு ஒரு விளையாட்டுவீரருக்கு அளிக்கும் உச்சபட்ச கவுரவமாக இது கருதப்படுகிறது.
தனக்களிக்கப்படும் நிலத்தில் சலாஹ் வீடு கட்டி குடியேறலாம். அல்லது மசூதி கட்டவும் அனுமதிக்கப்படுவார். நிலத்தை விற்கவும் அவருக்கு முழு உரிமை உண்டு என்று சவுதி அரசு வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here