சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் அமைப்பாக மனிதநேய மக்கள் கட்சி இயங்கிவருகிறது.உள்கட்சி தேர்தல் கடந்த 3மாதமாக நடந்து முடிந்து சென்னையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக மீண்டும் ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்பட்டார்.பொதுச் செயலாளராக சமதுவும், பொருளாளராகக் கோவை உமரும் தேர்வாயினர்.
2015ல் நடந்த பொதுக்குழுவிலும் ஜவாஹிருல்லாவே தலைவராக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.பொதுக்குழுவில், காவிரி வாரியம் அமைக்காமல் தாமதம் செய்வதற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 20தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.