Connect with us

Sports

கொல்கத்தாவுக்கு 178ரன் இலக்கு!

Published

on

கொல்கத்தா: ஈடன்கார்டன் மைதானத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது.
டாஸில் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வாட்சன், ப்ளசிஸ் முதல் ஓவரில் தலா 5ரன் எடுத்து வேகம் காட்டினர்.
ஆறாவது ஓவரில் ப்ளசிஸ் வெளியேற்றப்பட ரெய்னா களம் இறங்கினார்.பத்தாவது ஓவர் முடிவில் ரெய்னா, வாட்ஸன் தலா 26ரன்களுடன் ஒரு விக்கெட் இழப்புக்கு 90ரன்கள் எடுத்திருந்தது சென்னை.
11, 12, 15வது ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. 20ஓவர் முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 177ரன் எடுத்திருந்தது சென்னை அணி. தோனி 43ரன்களுடனும், கார்ன்ஷர்மா ரன்கள் எதுவும் எடுக்காமலும் களம் திரும்பினர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator