கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1 கோடி மோசடி!

தேனி: தேனி கனரா வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளராக செந்தில் என்பவர் பணி புரிந்து வந்தார். அவருக்கு உதவியாளராக வினோத் என்பவர் இருந்தார்.இவர்கள் கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் பெறுவதாகவும் மேலும் போலி பெயரில் நகைகளை அடகு வைப்பதாகவும் வங்கிக்கு புகார் வந்துள்ளது.இது குறித்த விசாரணையில் அடகு நகைகளில் கவரிங் நகைகள் இருந்ததும் நகைகள் இருப்பு குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் ரூ. 1 கோடி வரை மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பையா காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள செந்தில் வினோத் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here