துபாயில் தங்கம் மீதான வாட்வரி நீக்கம்!

துபாய்: தங்கம் மொத்த விற்பனையின் மீதான வாட் வரியை துபாய் அரசு நீக்கியுள்ளது
துபாயில் கடந்த ஜனவரி மாதம் முதல் அனைத்து பொருட்களின் மீதும் 5% வாட் வரி விதிக்கப்பட்டது.அந்நாட்டின் முக்கிய வர்த்தகங்களில் ஒன்று தங்கம். அதன்மீது 5% வாட் வரி விதிப்பு மற்றும் 5% இறக்குமதி வரிவிதிப்பு இரட்டை வரி தாக்குதல் என்று விமர்சிக்கப்பட்டது.கடந்த 4 மாதங்களில் துபையின் தங்க நகை விற்பனை பெருமளவு முடங்கியது.
இதை தொடர்ந்து தங்க நகைகள் மொத்த விற்பனையின்போது வசூலிக்கப்பட்டு வரும் 5% வாட் வரி நீக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை மொத்த விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு அப்படியே தந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தங்கம் சில்லறை விற்பனை ஓரளவு மீண்டும் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here