பறவை மோதி போர் விமானம் விபத்து! 2விமானிகள் பரிதாப பலி!!

ரஷ்யா: பறவை மோதி ரஷ்ய போர்விமானம் கடலில் விழுந்தது. அதில் இருந்த 2பைலட்டுகள் இறந்துள்ளனர்.
பகுதியில் ரஷ்யாவின் விமானப்படை தளம் இயங்கிவருகிறது.இங்கிருந்து போர்விமானங்கள் சிரியா மீதான தாக்குதல் நடத்த அனுப்பிவைக்கப்படுகின்றன.
எஸ்.யூ.30ரக விமானம் ஒன்று இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டுவந்தது.
அதில் 2 பைலட்டுகள் இருந்தனர். ஆகாயத்தில் இருந்து விமானத்தை தரையிறக்க கொண்டுவந்தனர்.அப்போது பறவை ஒன்று விமானத்தின்மீது திடீரென மோதியது. அதில் விமானத்தின் இன்ஜினில் பிரச்சனை ஏற்பட்டது. பைலட்டுகள் தரையிறக்குவதற்காக தீவிரமாக முயன்றனர்.
அவர்கள் முயற்சி பலிக்காமல் தறிகெட்டு ஓடிய விமானம் டார்டஸ் கடற்பகுதியில் விழுந்தது.இதுகுறித்து விமானப்படை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை. இது யதேச்சையாக நடந்த விபத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here