பீகாரில் பேருந்து தீப்பிடித்து 27 பேர் பலி!

பீகார்: பிகார் மாநிலம் சம்பாரமன் மாவட்டம் மோதிஹரி பகுதியில் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.தகவலறிந்து வந்த மீட்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here