டெல்லி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

புதுடெல்லி: மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் லேப்டாப் பேக்கில் கழிவறையில் இருக்கும் தங்க கட்டிகளை கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து விமான நிலைய வளாகத்தில் உள்ள கழிவறையில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கே கிடந்த பையை சோதனையிட்டதில் 9 தங்க கட்டிகள் இருந்துள்ளன.தங்க கட்டிகளை கைப்பற்றிய போலீசார் அதை சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 3 கோடி ரூபாய் மதிப்புள்ளது என்றும் ஒவ்வொன்றும் 1கிலோ எடையுள்ளது எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார். கழிவறையில் தங்க கட்டிகளை வைத்த நபரை பிடிக்கும் பணியில்
அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here