கால்பந்து போட்டியை ரசிக்க ஆண் வேடத்தில் வந்த பெண்கள்!!

டெஹ்ரான்:கால்பந்து விளையாட்டு போட்டியை பார்க்க ஆண்வேடமிட்டு மைதானத்துக்கு பெண்கள் வந்துள்ளனர். ஈரான் நாட்டில் இந்த ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.ஈரான் பெண்கள் விளையாட்டில் ஆர்வம் அதிகம் உடையவர்கள். 1979ல் பொது இடங்களில் நடைபெறும் போட்டிகளை ரசிக்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பெண்கள் ஆண்களைப்போல் வேடமிட்டு மைதானத்துக்கு வந்து விளையாட்டுகளை ரசித்து வருகின்றனர்.கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால் விளையாட்டுகளை ரசிப்பதில் பெண்கள் அதிகம் ஆர்வம்காட்டுகின்றனர்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி களம் இறங்குகிறது. அந்த அணியினருக்கான ஜெர்சிக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அந்நிகழ்ச்சியில் ஈரான் அதிபரும், சர்வதேச கால்பந்து விளையாட்டு கூட்டமைப்பு தலைவரும் பங்கேற்றனர். ஈரான் அதிபர் ருஹானி விரைவில் கால்பந்து மைதானத்துக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பேசினார்.

ஆனால், இந்நிகழ்ச்சியை பார்க்க 35பெண்கள் ஆண்களாக வேடமிட்டு வந்துள்ளனர். அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.2014ல் இதுபோல் பெண்கள் மைதானத்தில் கைதானார்கள். கடந்த பிப்ரவரிமாதம் கூடைப்பந்து மைதானங்களில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தனியே இருக்கை வசதி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here