மும்பை: ஒய்-பை எனும் கம்பியில்லா இணையசேவையை பயன்படுத்தி செல்போனில் பேசும்வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.ஒய்-பை வசதியில் தற்போது இணையத்தில் மட்டுமே இணையும் வசதி உள்ளது. இதை சற்று மேம்படுத்தி ஆப் வாயிலாக மற்றவர்களிடம் உரையாட முடியும். இவ்வகை காலிங் ஆப்-கள் வெளிநாடுகளில் பிரபலம்.
காலிங் ஆப்கள் அறிமுகப்படுத்தினால் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அதிகலாபமீட்ட முடியும்.
ஆனால் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே தனியார் நிறுவனங்கள் பயனடைய முடியும். இதனால் அந்நிறுவனங்கள் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.தற்போது விமானங்களில் உள்ளூர், சர்வதேச அழைப்புகளை செல்போனில் பேசலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்புகள் ஆப் வழியாகவே மேற்கொள்ள முடியும்.
இதற்காக விமானங்களில் ஒய்-பை வசதிக்கான ஹாட் ஸ்பாட்டுகள் வைக்கப்பட்டு இண்டெர்நெட் இணைப்புக்கு வசதி செய்யப்படும்.காலிங் ஆப்-கள் விமானத்தில் பயன்பட்டால் அதனைத்தொடர்ந்து அனைவரும் பயன்படும் வகையில் விரிவாகும். அப்போது செல்போனை பேசமட்டும் பயன்படுத்துவோர் ஒய்-பை இணைப்பு இருந்தாலே பேசமுடியும் என்கிற வசதி உருவாகும்.