வாட்ஸ் ஆப்பில் விடியோ கான்பரன்சிங் வசதி!

மும்பை:வாட்ஸ் ஆப் வழியாக பலபேருடன் ஒரேநேரத்தில் விடியோவில் பேசும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப்பை வாங்கியது. அதன்பின்னர் பல்வேறு வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.வாட்ஸ் ஆப் வாயிலாக தற்போது ஒருவரிடம் மட்டுமே விடியோ சாட் செய்யமுடியும். அதனை ஆடியோ கான்பரன்ஸ் வசதியில் உள்ளதைப்போன்று ஒரேநேரத்தில் பலரிடம் விடியோவில் பேசும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.ஸ்டிக்கர்கள் எனப்படும் உருவப்படங்கள் வாட்ஸ் ஆப்-ன் போட்டியாளர்களாக உள்ள சாட்டிங் ஆப்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
தனியார்கள் உருவாக்கும் ஸ்டிக்கர்களையும் வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்துவதற்கான வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வசதி 450மில்லியன் மக்களால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
வாட்ஸ் ஆப் பிசினஸ் சேவையை 3மில்லியன் மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.
வாட்ஸ் ஆப் வழியாக தினமும் 2பில்லியன் நிமிடங்கள் பேச, விடியோகாலிங்கில் நேரம் செலவிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here