ஆக்கிரமிப்பு அகற்றச்சென்ற பெண் அதிகாரி சுட்டுக்கொலை!

ஷிம்லா: சோலான் மாவட்டத்தில் உள்ள கசவுலி என்ற மலைகிராமத்தில் விதிமுறைகளை மீறி உணவகங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


நகர திட்டமிடல் துறை பெண் அதிகாரி ஷாலி பால ஷர்மா அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றார்.
ஒரு வாரத்திற்குள் உணவகங்களை அகற்ற வேண்டும் என அதன் உரிமையாளர்களை ஷாலி எச்சரிக்கை செய்துள்ளார்.இதனால் உணவக உரிமையாளர்களுக்கும், அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அடுத்த சில மணி நேரத்தில் அங்குள்ள உணவகத்தின் உரிமையாளர் விஜய் சிங் என்பவர், தனது துப்பாக்கியால் பெண் அதிகாரியை சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடினார்.

இந்த துப்பாக்கி சூட்டினால் மற்றொரு அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here