கத்தாரில் கட்டப்பட்டுவரும் பாலைவன ரோஜா!

தோகா:கத்தார் தேசிய அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
கத்தார் அரசர் அப்துல்லா பின் ஜசிம் மாளிகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி தேசிய அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

2லட்சத்து20ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த மியூசியம் அமையவுள்ளது.
இதில் கத்தாரின் வரலாறு, தற்போதைய வளர்ச்சி, எதிர்கால மேம்பாடு, கலாச்சாரம், கலை போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

2010ம் ஆண்டு இந்த மியூசியத்தின் கட்டுமான பணி தொடங்கப்பட்டது.
பாலைவன ரோஜாவை போன்று மியூசியம் கட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அடிலியர்ஸ் ஜியன் நூவல் நிறுவனம் கட்டிவருகிறது.

3 மாதங்களுக்குள் மியூசியம் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இந்தாண்டு டிசம்பரில் மியூசியம் திறந்துவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here