காவலர் தேர்வு! ஆண், பெண்களுக்கு ஒரே அறையில் பரிசோதனை!!

மத்தியப்பிரதேசம்: போலீஸ் வேலைக்கு உடற்தகுதி சோதனையின் போது சாதி பிரிவை நெஞ்சில் எழுதியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்வானவர்களுக்கு நடந்த மருத்துவ பரிசோதனை ஆண், பெண் இருவருக்கும் ஒரே அறையில் நடந்ததால் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேர்வானவர்களுக்கு பிஹிந் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. இவ்வாறு நடக்கும் பரிசோதனை ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்துவது வழக்கம்.
அதற்கு மாறாக இருவரையும் ஒரே அறையில் டாக்டர்கள் சோதனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆண்கள் உள்ளாடையுடன் பரிசோதனைக்கு நிற்க அதே அறையில் பெண் தேர்வர்கள் நின்று கொண்டிருந்தனர்.
பெண் தேர்வர்களை பெண் டாக்டர்கள் பரிசோதிக்காமல் ஆண் டாக்டர்களே பரிசோதனை செய்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தலைமை மருத்துவர் கூறும்போது இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here