சிங்கத்தின் பிடியில் சிக்கியவர்! அதிசயமாக உயிர்பிழைத்தார்!!

தென்னாப்ரிக்கா: சிங்கத்தின் வாயில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார் பிரிட்டனை சேர்ந்த மைக் ஹட்ஜ்(67).
தென்னாப்பிரிக்காவில் மரெக்லே விலங்கியல் பண்ணை உள்ளது.அதனை பிரிட்டனை சேந்த மைக் ஹட்ஜ் பராமரித்துவருகிறார். அப்பண்ணையில் 10சிங்கங்கள் வசிக்கின்றன.
சிங்கங்கள் அடைக்கப்பட்ட வளாகத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதனை சோதிக்க அவ்வளாகத்தில் மைக் ஹட்ஜ் நுழைந்தார்.அப்போது ஒரு சிங்கம் திடீரென்று வந்தது. சுதாரித்துக்கொண்ட மைக்ஹட்ஜ் வளாகத்தில் இருந்து வெளியேற முயன்றார். அதற்குள் பாய்ந்துவந்த சிங்கம் அவர் கழுத்தை பிடித்து தரதரவென்று இழுத்துச்சென்றது.
அப்பண்ணையை சுற்றிப்பார்க்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் இச்சம்பவத்தை விடியோவாக்கினர்.

பண்ணை பராமரிப்பாளர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். இதனால் சிங்கம் மைக்கை அப்படியே போட்டுவிட்டு ஓடிச்சென்றது.
மயக்கமான நிலையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கழுத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here