பியூன் வீட்டில் ரெய்டு! பலகோடி சொத்து குவித்தது அம்பலம்!!

நெல்லூர்: நெல்லூர் போக்குவரத்து துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக உள்ள கே.நரசிம்ம ரெட்டிசமீபத்தில் 18 பிளாட்டுகளை ஒரே சமயத்தில் வாங்கியுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் வந்துள்ளது. புகாரையடுத்து நரசிம்ம ரெட்டியின் வீட்டை சோதனை செய்தனர்.விஜயவாடாவில் உள்ள நகைக்கடையில் இருந்து சமீபத்தில் வாங்கிய சுமார் 7 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் தங்கநகைகளை கைப்பற்றியுள்ளனர்.மேலும், இந்தச் சோதனையின் போது, ரூ.7.70 லட்சம் ரொக்கப்பணம், வங்கியில் ரூ.20 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்க நகைகள், ரூ. ஒரு கோடிக்கு மதிப்பிலான எல்ஐசி காப்பீடு பத்திரங்கள், 50 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவை இருப்பதற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.நரசிம்ம ரெட்டி கடந்த 1984ம் ஆண்டு அக்டோபா் 22ம் தேதி ரூ.650 மாத சம்பளத்திற்கு பணியில் சேர்ந்துள்ளார். தற்போது அவர் வாங்கியுள்ள 18 பிளாட்டுகளின் மதிப்பு ரூ. 10 கோடியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here