டிவி சேவையை துவக்குகிறது பேஸ்புக்!

கலிபோர்னியா:பேஸ்புக் நிறுவனம் டிவி சேவையை விரைவில் துவக்குகிறது.
பேஸ்புக் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்பு மற்றும் மேம்பாடு குறித்த 2நாள் கருத்தரங்கு நடைபெற்றது.எதிர்கால தொழில்நுட்பங்களான நிகர்தோற்ற தொழில்நுட்பம்(ஏஆர்), மெய்நிகர்தோற்ற தொழில்நுட்பம்(விஆர்) ஆகியவற்றை பேஸ்புக் சிறப்பாக கையாண்டு வருகிறது.பேஸ்புக் மெசஞ்சரில் நிகர்தோற்ற கேமரா எபக்டுகளை பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.ஓகுலஸ்டிவி சேவையையும் துவக்குகிறது பேஸ்புக்.
இதனால் அன்றாட நிகழ்வுகள், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு ஆகியவற்றை மெய்நிகர்தோற்ற தொழில்நுட்பத்தில் காணலாம். ஓகுலஸ் வளாகத்தில் படமெடுக்கப்படும் நிகழ்ச்சிகளையும் அகன்ற திரையில் பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் 4பேர் ஹெட்செட்டை பயன்படுத்தி பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.மெய்நிகர் தோற்ற தொழில்நுட்பமான விஆர் பயன்படும் ஹெட்செட்டுகளை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. இதன் விலை 199டாலர். இந்த ஹெட்செட்டுகளில் விஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டுகள், நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், சினிமா ஆகியவற்றை ரசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here