அமைச்சர் நிர்மலா கார் மீது கல்வீச்சு!!

ராமநாதபுரம்:மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்மீது செருப்பு, கல்வீசி தாக்குதல் நடந்தது.
திமுகவினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் நடைபெற்ற சமூகவளைகாப்பு திட்டத்தில் மத்திய அமைச்சர் பங்கேற்றார்.
இதற்காக அவர் காரில் வந்துகொண்டிருந்தார்.வழியில் காரை வழிமறித்த திமுக வினர் கருப்புக்கொடிகாட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காவிரி வாரியம் அமைக்காததை எதிர்த்து கோஷமிட்டனர். செருப்பு, கற்களும் காரில் விழுந்தன.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவலர்கள் உதவியுடன் அமைச்சர் பயணம் தொடர்ந்தார்.
கள்ளிக்குடி, சூலையூரில் உள்ள தலித் வீடுகளில் அமைச்சர் தங்குகிறார்.
பிரதமர் மோடி எம்பிக்களிடம் தலித் சமூகத்தினர் வீடுகளில் தங்கவேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here