Connect with us

india

கொல்கத்தா மெட்ரோ ஸ்டேசனில் கட்டிப்பிடி போராட்டம்!

Published

on

கொல்கத்தா: கொல்கத்தா டம் டம் மெட்ரோ ஸ்டேசனில் காதல் ஜோடி ஒன்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டனர். இதை பிடிக்காத சக பயணி அவர்களை தாக்கியுள்ளார்.இந்த சம்பவத்தையடுத்து ராகுல் சக்ரபோர்த்தி என்பவர் தன் முகநூல் பக்கத்தில் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதை ஏற்று ஆயிரக்கணக்கானோர் டோலிகஞ்ச் மெட்ரோ ரயில் நிலையத்தில் திரண்டனர். ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாத அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் நாங்கள் எந்த கட்சியையோ அமைப்பையோ சார்ந்தவர்கள் அல்ல. இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்துள்ள சாதாரண கொல்கத்தா குடிமக்கள். வெறுப்புச் செயல்களுக்குப் பதிலாக அன்பினை பரப்ப விரும்புவார்கள் என்று தெரிவித்தார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator