கலெக்டர் அளித்த கவுரவம்! அரசு அதிகாரிகள் நெகிழ்ச்சி!!

கரூர்: மாவட்ட கலெக்டர் தனது டிரைவருக்கு பணி ஓய்வுநாளில் அளித்த கவுரவம் கரூர் அரசு அதிகாரிகளிடம் நெகிழ்ச்சியாக பேசப்பட்டு வருகிறது.கரூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருபவர் அன்பழகன்.
இவரது கார் ஓட்டுநராக பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் பரமசிவம்.
அவர் ஓய்வு பெற்றார். கடைசிநாளில் பணிக்கு வந்து மாலையில் கலெக்டரை வீட்டில் விடுவதற்காக காத்திருந்தார்.கடைசிநேரத்தில் பரமசிவம் ஓய்வுபெருவதை தெரிந்துகொண்ட கலெக்டர் அவருக்கு உடனடியாக சிறிய அளவில் பிரிவு உபசார விழா நடத்தினார்.
பின்னர் தனது காரிலேயே அழைத்துச்சென்று அவரது வீட்டில் விட்டுவந்தார். காரை கலெக்டர் ஓட்டிவர அவர் டிரைவர் பக்கத்தில் அமர்ந்துவந்தது அதிகாரிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்தமாதம் ஏழைப்பெண் ஒருவர் நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாச்சு என்று கூற அவருடன் தனது வீட்டு உணவை வரவழைத்து சேர்த்து சாப்பிட்டார் கலெக்டர் அன்பழகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here