வங்கிகளில் தொடரும் நிதிமோசடி!!

மும்பை:வங்கிகளில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.23ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டுள்ள பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்தகவல் பெறப்பட்டுள்ளதாக பிடிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் இடம்பெற்றுள்ள விபரம்:

”கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து வங்கிகளிலும் 23 ஆயிரத்து 866 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.
2017 ஏப்ரல் முதல் 2018மார்ச் வரை 5 ஆயிரத்து 152 வங்கி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதன் மதிப்பு ரூ.28 ஆயிரத்து 459 கோடியாகும். கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் தொகைதான் மிக அதிகமாகும்.கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 5,076 வழக்குகள் ரூ.23 ஆயிரத்து 933 கோடிக்கு பதிவாகி உள்ளன.
2015-16 ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 693 வழக்குகளும், ரூ.18 ஆயிரத்து 698 கோடியும், 2014-15 ஆம் ஆண்டில் 4,639 வழக்குகளும் ரூ.19 ஆயிரத்து 455 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளது.
2013-14 ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 306 வழக்குகள் பதிவாகி ரூ.10 ஆயிரத்து 170 கோடியும் மோசடி தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நடந்துள்ள மோசடிகளின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 718 கோடியாகும்.மோசடி வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு கடந்த டிசம்பர் மாதத்துடன் ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்து 958 கோடியாக உயர்ந்துள்ளது.தொழில்துறையினர், சேவைத்துறையினர், வேளாண் துறையினர் ஆகியோர் கடனை திருப்பிச் செலுத்தாததால், வாராக்கடன் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here