இளைஞர்களை கவர ஐடியா!! பேஸ்புக்கில் டேட்டிங் வசதி!!

கலிபோர்னியா: தகவல் விற்பனை குற்றச்சாட்டை உதறித்தள்ளிவிட்டு புதிய உற்சாகத்தோடு சமூக ஊடகமாக நிமிர்ந்து எழுந்துள்ளது பேஸ்புக்.அந்நிறுவனத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்த எப்8 மாநாடு நடைபெற்றது. அதில் பேஸ்புக் தலைவர் மார்க் சூகர்பர்க் பங்கேற்றார்.
பேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்கள் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பயனாளர்கள் தகவல் திருட்டை தடுக்க கூடுதல் பொறுப்பு அளிக்கப்படும் என்றார்.
மேலும் இது குறித்து அனைத்து நாடுகளிலும் ஆலோசனை நடத்தப்பட்டு தகவல்கள் கசியாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பேஸ்புக் பயனாளர் குறிப்பு தற்போது அனைவருக்கும் தெரியுமாறு உள்ளது. ஆனால் ஒரே மனநிலையில் உள்ளவர்கள் சந்திப்பதற்கு ஏதுவாக டேட்டிங் புரோபைல் என்ற பயனாளர் குறிப்பு புதிதாக அறிமுகமாகும்.குழுவாகவும் பயனாளர்கள் செயலாற்றலாம். ஆனால், ஒரு குழுவில் உள்ளவர்களுக்கு இடையேயும் தனித்தனியாகவே தகவல்கள் பரிமாற்றம் செய்ய வசதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பாதுகாப்பு பயனாளருக்கு கிடைக்கும்.வாட்ஸ் ஆப்-ல் குரூப்விடியோ சாட்டிங், இன்ஸ்டாகிராமில் விடியோ சாட்டிங், பேஸ்புக்கின் ஓகுலஸ் ஹெட்செட் போன்ற அறிவிப்புகளை மார்க் சூகர்பர்க் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here