Connect with us

Crime

பசு மீது தொழிலதிபர் போலீசில் புகார்!

Published

on

டெல்லி: பசுமாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலதிபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
டெல்லி ஷெர்வாலி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கடந்த 27ம் தேதி விபத்தில் சிக்கினார்.அவர் டூவீலர் மீது அங்கு மேய்ந்துகொண்டிருந்த பசுமாடு திடீரென மோதியது.
இதனால் டூவீலர் சரிந்தது. அவர் கால் எலும்பு முறிந்தது. அதற்கு சிகிச்சை பெற்று திரும்பிய அவர் போலீசில் புகார் கொடுத்தார்.பசுமாட்டினால் தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிட இருந்தது. விபத்துக்கு காரணமான மாட்டின் மீது நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு தொழிலதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.அவர் கூறிய அடையாளங்களுடன் கூடிய மாடு தற்போது அப்பகுதியில் இல்லை. எனவே, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வுசெய்து பசுவையும், அதன் உரிமையாளரையும் தேடிவருகின்றனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator