டாஸ்மாக் கடைகளை ஆவியாக வந்து அழிப்பேன்! தற்கொலை செய்த மாணவரின் ஆவேச கடிதம்!!

நெல்லை: சங்கரன்கோவிலை அடுத்த குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தினேஷ் நல்லசிவன் 12ம் வகுப்பு முடித்து நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.மாடசாமி தினமும் குடித்துவிட்டு வீட்டினரிடம் தகராஸு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலையும் அதேபோன்று ஈடுபட்டுள்ளார்.
இதனால் தந்தையிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார் தினேஷ்.
நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.அவர் உடல் மீட்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அவர் பையில் எழுதிவைத்திருந்த கடிதம் அனைவரையும் உருக்குவதாக உள்ளது.
அக்கடிதத்தில் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று பிரதமர், முதல்வரை தினேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆவியாக வந்து மதுபான கடைகளை உடைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
தான் இறந்தபின்னராவது தந்தை திருந்தி குடிப்பழக்கத்தை விடவேண்டும். அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும் என்று உருக்கமாக எழுதியுள்ளார் தினேஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here