காவிரி வாரியம்! கண்ணாமூச்சி ஆடும் மத்திய அரசு!!

டெல்லி:காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு ஸ்கீம் எதுவும் தயாரிக்கவில்லை. அதற்கு அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு செய்துள்ளது.காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீடு செய்யமுடியாத வகையில் அளிக்கப்பட்ட அத்தீர்ப்பில்  காவிரி பங்கீடு தொடர்பாக செயல்திட்டம் – ஸ்கீம் உருவாக்குமாறு மத்திய அரசுக்கு 6வாரம் அவகாசம் அளித்தது.
ஆனால் ஸ்கீம் உருவாக்குவதில் காலம்தாழ்த்தி வருகிறது மத்திய அரசு. இந்நிலையில், கடந்த 9ம் தேதி ஸ்கீம் உருவாக்கி நீதிமன்றத்தில் மே.3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்தவாரம் மத்திய அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு மேலும் 2வாரம் அவகாசம் கோரப்பட்டது. அதனை உடனடியாக விசாரிக்க மறுத்தது நீதிமன்றம். இதனால் அம்மனு வாபஸ் பெறப்பட்டது.

மே.3ம் தேதி வியாழக்கிழமை ஸ்கீம் தாக்கல் செய்யவேண்டிய நிலையில், மத்திய அரசு மே16ம் தேதிவரை அவகாசம் வேண்டி இன்று புதியமனு தாக்கல் செய்தது. இம்மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் நாளை மனுவை தாக்கல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.மே.12ல் கர்நாடகா மாநில பேரவை தேர்தல் நடைபெறுகிறது. எனவே அதுவரையில் மத்திய அரசு காவிரி விஷயத்தில் கண்ணாமூச்சி ஆடும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here