அஜித் நடிக்கும் விசுவாசம் யோகி பாபுவின் 100வது படம்!

சென்னை: பல படங்களில் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விசுவாசம் படம் அவருக்கு 100வது படம்.யோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாபு. சுப்ரமணியம் சிவா இயக்கிய இப்படம் சிறந்த அறிமுகமாக அமைந்ததால் இப்படத்திற்கு பின்னர் தன் பெயரை யோகி பாபுவாக மாற்றிக் கொண்டார்.அதன் பின்னர் வந்த கலகலப்பு, பட்டத்து யானை, மான் கராத்தே, யாமிருக்க பயமேன், ரெமோ என பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.தற்போது விஜய் நடித்து வரும் படம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக சிவாஇயக்கத்தில் அஜித் நடிக்கும் விசுவாசம் படத்திலும் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படம் யோகி பாபுக்கு 100வது படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here