காசநோய் பாதித்தவருக்கு புற்றுநோய் சிகிச்சை! தனியார் மருத்துவமனை மீது புகார்!!

சென்னை : மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாஸ்கரன். இவர் மகன் செல்வகுமார் கார் டிரைவர்.
செல்வகுமாருக்கு கழுத்து பகுதியில் நெறிகட்டியால் வலி ஏற்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.கழுத்து நரம்பில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய பிறகு வலி குறையவில்லை.
சிகிச்சைக்கு பிறகு மூச்சு விடவும் சிரமப்பட்டுள்ளார் செல்வக்குமார்.செல்வகுமாரை மீண்டும் பரிசோதித்த டாக்டர், புற்றுநோய் பாதிப்பு உள்ளதாகவும், அதற்காக தொடர் சிகிச்சையும் அளித்துள்ளார்.
செலவு செய்ய பணமில்லாமல் வேறு வழியின்ரி செல்வக்குமார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சென்றார்.அவருக்கு புற்றுநோய் பாதிப்பில்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது. அவர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் மனமுடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்னர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றனர்.
அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here