முதலில் அறுவடை செய்யக்கூடாது! தலித் விவசாயிக்கு கொடூர தண்டனை!!

ராஜஸ்தான்: தலித் இனத்தை சேர்ந்த விவசாயி அடித்து காயப்படுத்தப்பட்டு சிறுநீரை குடிக்கவைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.உத்தர பிரதேசத்தில் சித்தாராம் என்பவர் பில்வாராவில் உள்ள தனது வயலில் கோதுமை பயிர் செய்துவந்தார். பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனால் சக தொழிலாளர்களுடன் அறுவடை செய்ய வயலுக்கு வந்தார்.அதே பகுதியில் வசித்து வந்த உயர்ந்த சாதி பிரிவினர், தங்களது நிலத்தில் உள்ள கோதுமையை முதலில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று பிடிவாதம் செய்தனர். அதற்கு சித்தாராம் மறுத்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து நான்கு பேர் சேர்ந்து, சித்தாராமை மரத்தில் கட்டி வைத்து, அடித்து கொடுமைபடுத்தினர். அவரது மீசையை அகற்றினர்.மேலும் அவரது சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
சித்தாராமின் மனைவி இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
விஜய் சிங், விக்ரம் சிங், சொம்பால் சிங், மற்றும் பிங்கு ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here