கோவில் விழாவில் மோதல்! சகோதரர்கள் உள்ளிட்ட 3பேர் பலி!!

பட்டுக்கோட்டை: கோவில் திருவிழாவின்போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் மூன்றுபேர் கொல்லப்பட்டனர்.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த மஞ்சவயல் பாலசுப்ரமணியன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
தேரில் சுவாமிக்குப் பூஜை செய்வது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த வாக்குவாதம் திடீரென மோதலாக மாறி இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அடிதடியில் இறங்கினர்.
இரு தரப்பும் ஆயுதங்களால் தாக்கினர். வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
பிரதீப், சிவநேசன் ஆகியோர் பலத்த காயமடைந்து இறந்தனர். பிரதீப்பின் சகோதரர் ராஜேஷ் கண்ணா சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 5பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.            

இச்சம்பவத்தால் கோவில் வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.               போலீசார் குவிக்கப்பட்டு அசம்பாவிதம் தொடராவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here