கர்நாடகாவில் பாஜக புயல்! ராகுலுக்கு மோடி சவால்!!

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் 12ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது.பிரதமர் நரேந்திரமோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். 5நாட்களில் 15இடங்களில் அவர் பேசுகிறார்.
சாம்ராஜ்நகர் மாவட்டம் சாந்தமனகரஹள்ளியில் அவர் பிரச்சாரம் செய்தபோது கூறியதாவது:
கர்நாடகாவில் பி.ஜே.பி அலை இல்லை. மாநிலத்தில் பாஜக புயல் வீசுகிறது. கர்நாடக மக்களுக்கு எடியூரப்பா மீது நம்பிக்கை உள்ளது. அவர் இந்த மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் ஆவார்.சுதந்திரம் பெற்றதில் இருந்து கடந்த 70 ஆண்டுகளில் செய்யப்படாததை நாங்கள் செய்துள்ளோம்.
இன்னும் மின்சார வசதி இல்லாத 25 கோடி குடும்பங்களில் 4 கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கவுள்ளோம்.

2005 ல், 2009 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வழங்குவதாக மன்மோகன் சிங் கூறினார். அது என்ன ஆனது.
எந்த சந்தர்ப்பத்தில், காங்கிரஸ் எப்படி டாக்டர் மன்மோகன் சிங்கைக் கையாண்டது என்று பார்த்தோம். அவரது உத்தரவுகளை கிழித்து, அவரை அவமதித்தார்கள்.
கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த வளர்ச்சி திட்டங்கள் பற்றி 15 நிமிடங்கள் பேப்பர் இல்லாமல் பேச தயாரா? என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி சவால் விடுத்தார்.கோலார் தங்கவயலில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, பெங்களூர் 3 குண்டர்கள் பிடியில் உள்ளது என்றார். அமைச்சர்கள் ரோஷன் பெய்க், ஜார்ஜ், எம்.எல்.ஏ. ஹாரிஷ் ஆகியோர் பெங்களூரை ஆட்டிப்படைக்கின்றனர். அவர்கள் பிடியில் இருந்து மக்கள் விடுவிக்கப்படுவார்கள். பாஜக ஆட்சியைப்பிடித்ததும் மக்கள் சுதந்திர காற்றை அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here