Connect with us

Crime

திருமண மேடையில் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொலை!!

Published

on

உத்தரப்பிரதேசம்: திருமண மேடையில் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் வர்மா (24) என்பவருக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமண சடங்கின் போது சுனில் மணமேடையில் அமர்ந்திருந்தார்.திடீரென சுனில் நெஞ்சில் கை வைத்து கீழே விழுந்தார். அவர் விரல்கள் வழியாக ரத்தம் வழிந்தது.
இதனை கண்ட உறவினர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  சுனில் நெஞ்சில் குண்டு பாய்ந்திருந்தது தெரியவந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.சுனிலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருமண விடியோவை பார்த்த போது சுனிலின் நண்பர் ராம் சந்திரா என்பவர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.போலீசார் ராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்சந்திரா தலைமறைவாகியுள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator