பாஜக, காங்கிரஸ் மீது முன்னாள் நீதிபதி விளாசல்!

பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கில் ஊழல் குற்றம்சாட்டப்பட்டவர்களையும், பல்வேறு புகார்களுக்கு ஆளானவர்களையும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தலில் நிறுத்தியுள்ளன.

லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே இதுகுறித்து கடுமையாக சாடியுள்ளார். பப்ளிக் டிவி-க்கு அவர் அளித்த பேட்டி விபரம்:அரசியலில் வெற்றிபெற்று மக்களுக்கு நன்மை செய்யவே போட்டி போடுகிறோம் என்ற மனநிலை வேட்பாளர்களிடம் இல்லை. ஜெயிக்க வேண்டும். ஜெயித்த பின் பதவியால் பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.வெற்றியை கருத்தில் கொண்டே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். இதனால் ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு ஆளானவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மக்கள் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பு தரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  நேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க  வேண்டும். இதன்மூலம் அரசியல் கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.   அதன்பின்னர்தான் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தும்.  யாரும் சரியான வேட்பாளர் இல்லை என்று வாக்காளர் முடிவெடுத்தால் நோடாவை தேர்வு செய்து வாக்குப்பதிவு செய்யவேண்டும்.  

பாஜகவில் ஒருவருக்கு சீட் தரப்படவில்லை. அவர் கட்சி மாறுகிறார். காங்கிரஸ் அவருக்கு சீட் தருகிறது.  கனிம மோசடியில் சிக்கிய பாஜகவின் தலைவர்களான ரெட்டி சகோதரர்கள் அக்கட்சியின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

மக்கள் ஊழல்வாதிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க இத்தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு சந்தோஷ் ஹெக்டே பேட்டியில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here