முஸ்லிம்களுக்கு வேலையில்லை! கேரளாவில் விஷம பிரச்சாரம்!

மூவாட்டுப்புழா:கேரளமாநிலத்தில் உள்ள நகரங்களில் ஒன்று மூவாட்டுப்புழா. இங்கு ஹோண்டா ஜெனரேட்டர், விவசாய துணைக்கருவிகள் விற்கும் ஷோரூம் உள்ளது.
அந்நிறுவனம் அளித்ததாக கூறும் ஒரு விளம்பரம் முஸ்லிம் அமைப்பினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.விளம்பரத்தில் தங்கள் ஷோரூமில் பணியாற்ற மெக்கானிக் தேவை என்றும், அவருக்கு ஒன்று முதல் 2வருடம் அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது.இறுதியாக மெக்கானிக் பணிக்கு இந்து அல்லது கிறிஸ்தவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தை முஸ்லிம் அமைப்பினர் வாட்ஸ் ஆப்பில் தகவலாக பகிர்ந்து வருகின்றனர்.இது தொடர்பாக ஹோண்டா ஷோரூம் விற்பனை அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், விஷமிகள் இதுபோன்ற விளம்பரம் அளித்துள்ளனர். அவர்கள் சமூகத்தில் பிரச்சனையை உண்டாக்க வேண்டும் என்ற கொள்கையோடு இதனை செய்துள்ளனர்.
எங்கள் ஷோரூமில் ஏற்கனவே முஸ்லிம்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here