ஆடுமேய்ப்பவர் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை!!

திருவண்ணாமலை: ஐ.ஏ.எஸ். தேர்வில் ஆடு மேய்ப்பவரின் மகன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர் குரூப்1 தேர்வு முடிவுகள் வெளியாகின.
அதில், திருவண்ணாமலை மாவட்டம் சின்னக்கல்லந்தல் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் தேர்ச்சி பெற்றுள்ளார்,இவரது தந்தை பச்சையப்பன் ஆடு மேய்க்கும் தொழிலாளி. தாய் குமாரி.
திருவண்ணாமலை, எஸ்.கே.பி., பொறியியல் கல்லுாரியில், இ.சி.இ., படித்துவிட்டு, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்து வந்தார். தற்போது, ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
வெற்றிகுறித்து அவர் கூறுகையில், சகாயம், இறையன்பு போன்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை முன்னுதாரணமாக நினைத்து படித்தேன். முதலில், சென்னையில் உள்ள மனித நேய மையத்தில், இரண்டு மாதம் படித்தேன்.

அரசு வழங்கிய, லேப்டாப்பில், இணையதள வசதியுடன் படித்து, தேர்ச்சி பெற்றேன்.
மாநிலத்தில், முதலிடம் வரவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், 74-வது இடம் பெற்றுள்ளேன்.பணியில் சேர்ந்து, கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார நடவடிக்கை எடுப்பதில், கவனம் செலுத்துவேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here