Connect with us

india

சிகிச்சை அளிப்பதில் அரசியல்!! லாலு பிரசாத்யாதவ் குற்றச்சாட்டு!

Published

on

டெல்லி: கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் பிகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்யாதவ்.
சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவரை காங். தலைவர் ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
மதியம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்

எனது சிகிச்சை இன்னும் முடியவில்லை.
அரசியல் பழிவாங்கும் நோக்குடன் நான் டிஸ்சார்ஜ் ஆக நிர்பந்திக்கப்பட்டேன் என்றார்.
ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து
லாலுவுக்கு சிகிச்சை ஏற்பாடு செய்யப்படும். அவரின் உடல் நிலையும் பயணம் செய்யும் அளவுக்கு முன்னேறிவிட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator