ஆன்மிக அரசியல்! களம் இறங்குகிறார் நித்யானந்தா!!

திருவண்ணாமலை: ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்து அரசியலில் ஈடுபட சர்ச்சை சாமியார் நித்யானந்தா களம் இறங்கவுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நித்யானந்தா. பெங்களூரை அடுத்த பிடதியில் ஆஸ்ரமம் அமைத்துள்ளார்.நடிகையுடன் தனிமையில் இவர் இருக்கும் விடியோ வெளியாகி மக்களிடம் மதிப்பிழப்பு இழந்தார்.
பின்னர் இளைய ஆதினமாக முயற்சித்து தோல்வியடைந்தார்.சில ஆண்டுகள் வழக்குகளில் இருந்து தன்னை விடுவிப்பதில் கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது ஆன்மிக அரசியல் களத்தை நிரப்ப தயாராகி வருகிறார்.
நித்யானந்தா சேனை என்ற அமைப்பை இவர் துவக்கியுள்ளார். தன்னுடன் படித்த சிவா தமிழன் என்பவரை சேனையின் மாநில தலைவராக்கி உள்ளார்.ஒன்றியம்தோறும் சேனைக்கு ஆள்சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது.
தேசியமும் தெய்வீகமும் எங்களின் இரு கண்கள் என்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் கொள்கைகளை அடியொற்றி இந்து தர்மம், தமிழ் சைவநெறியை பரப்புவதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here