விசில்போடு! இப்போ கமலும் சொல்லிவிட்டார்!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் விசில் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி துவங்கும்போதே விசில் ஆப் குறித்து கமல் தெரிவித்திருந்தார்.மக்கள் பிரச்சனையை இணையத்தில் பதிவுசெய்து அதன் மீது நடவடிக்கை எடுக்க விசில் உதவியாக இருக்கும்.
மக்கள் கைகட்டி அமைதிக் காப்பதுதான் அனைத்திற்குமான பிரச்சனை என்றும், அந்த நிலை மாற பிரச்னைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.நம்மைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளை, குற்றங்களை, ஊழல்களை பார்த்தும் பார்க்காதது போல கைகட்டி வேடிக்கை பார்த்தது போதும்.
பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையாக அதனை விசிலில் பதிவிடவேண்டும்.
செல்போன் எண்ணையும் மின்னஞ்சலையும் வைத்து மய்யம் விசிலில் பதிவு செய்யவும்.அபாயச் சங்கு எனும் பகுதியில் லஞ்சம், ஊழல், சுற்றுச்சூழல்சீர்கேடு, பொதுப்பிரச்சனைகள் உள்ளிட்ட எந்த பிரச்சனையையும் தெரிவிக்கலாம்.
குடிமக்கள் ஒரு பிரச்சனையை புகார் அளித்த பின் களவீரர் / கள வீராங்கனை அப்புகார் உண்மை என நேரில்உறுதி செய்வார். பின்னர் அப்புகாரை செயலியில் பதிவு செய்வதற்கு அனுமதி அளிப்பார்.பின்னர் அப்பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுசெல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விசில் ஆப் ஆண்டிராய்ட், ஐபோன்களில் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here